13 40
இலங்கைசெய்திகள்

யோஷிதவை தொடர்ந்து நாமலும் கைது: கசிந்தது அநுர அரசின் உள்ளக தகவல்

Share

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் யோஷித இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2029 ஆம் ஆண்டுக்குள் நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாகிவிடுவார் என்ற பெரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நியாயமான பயம் இருப்பதிலிருந்து ஜனாதிபதி ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களுக்கான தேவைகளை மறந்து விட்டு, அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்களையே மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, அரசாங்கம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பாரிய சவாலாக எடுத்துக் கொண்டு இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் தாங்கள் குற்றம் இழைத்திருந்தால் அதனை நீருபித்து காட்டுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...