22 6
உலகம்செய்திகள்

அன்று ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின் வெளிப்படை

Share

2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள புடின், தாம் ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்றார். மூன்றாண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது குறித்து ட்ரம்புடன் விவாதிக்க தயார் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது ஒரு சதிச்செயலின் தொடக்கமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். இருப்பினும், ட்ரம்பை அதிகமாக புகழ்ந்துள்ள புடின், அவர் ஒரு புத்திசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். போருக்கு காரணமான புடின், தற்போது ட்ரம்பின் தேர்தல் வெற்றி களவாடப்பட்டுள்ளது, இல்லையெனில் உக்ரைன் போர் நடந்திருக்காது என கூறுவதெல்லாம், வெறும் ஏமாற்று வேலை என்றே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.

ட்ரம்பின் முடிவை தமக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கைகளில் புடின் இறங்கியுள்ளார் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பிடம் இனி ரஷ்யாவின் நரித்தனம் விலை போக வாய்ப்பில்லை என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2022 பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது படையெடுப்பை நடத்திய புடின், தற்போது உலகத் தலைவர்களை ஏமாற்றி, போரை மீண்டும் தொடரவே நாடகமாடுகிறார் என ஜெலென்ஸ்கி சாடியுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு புறப்படவும் தாம் தயார் என ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்தே புடின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், உக்ரைனில் படுகொலை நடப்பதாகவும், உண்மையில் அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷ்யா தயாராகவில்லை என்றால், தடைகள் மற்றும் வரி விதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...