2 41
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்

Share

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்

அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணை தவிசாளர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) , இலங்கைக்கான தனது இரண்டு நாள் பயணத்தை இன்று (22) முடித்துக்கொண்டார்.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

மேலும், ரைசரின் வருகையின் போது அரசாங்கத்தின் திட்டங்களான வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் க்ளீன் சிறிலங்கா ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டு மீண்டும் தனது ஆதரவை உறுதி படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த திட்டங்கள் கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னேடுக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...