17 27
உலகம்செய்திகள்

வானத்தில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 6 கோள்கள்

Share

வானத்தில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 6 கோள்கள்

வானத்தில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அணிவகுக்கும் அபூர்வமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

சூரிய குடும்பத்தில் பூமி உள்பட அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்றுவட்ட பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன. அதுவும், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன.

இந்நிலையில், இந்த கோள்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிது. பொதுவாகவே 3 அல்லது 4 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தோன்றுவதை காணலாம்.

ஆனால், தற்போது வானத்தில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அணிவகுக்கும் அபூர்வமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

அதாவது, ஒரே நேர்கோட்டில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் தென்பட்டு வருகின்றன.

இவற்றை நாம் காண்பதற்காக இந்தியா முழுவதும் அறிவியல் அமைப்புகள் சார்பில் நாளை முதல் வருகிற 25-ம் திகதி (சனிக்கிழமை) வரை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நாம் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களாலும், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை சக்திவாய்ந்த தொலைநோக்கிகளாலும் காண முடியும்.

அந்தவகையில் சென்னையில் உள்ள பொதுமக்கள் கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 25-ம் திகதி வரை தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...