15 28
ஏனையவை

யாழ்.மத்திய பேருந்து நிலைய வியாபாரிகள் விடுத்துள்ள கோரிக்கை

Share

யாழ்.மத்திய பேருந்து நிலைய வியாபாரிகள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மை அகற்ற வேண்டாம் என பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் நேற்றையதினம் (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வியாபாரிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பேருந்து நிலைய வளாகத்தில் எமது வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து நாம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர்.

இதேவேளை எம்மை நம்பியே எமது குடும்பம் இருக்கின்றது.15 வருடமாக இதனை நம்பியே நாம் வாழ்கின்றோம்.இலங்கை போக்குவரத்து சபை எங்களுக்கு தமது வளாகத்தில் செயற்பட அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். எங்களுடைய பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.

இலங்கை போக்குவரத்து சபை சேவையினையும் இந்த இடத்தினை விட்டு அகற்ற கூடாது. அந்த சேவை இந்த பகுதியில் முன்னெடுப்பதன் மூலமே எமக்கு வருமானம் கிடைக்கிறது.

தற்பொழுது மாநகர சபை இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை முகாமையாளரூடாக 14 நாட்களுக்குள் எம்மை வெளியேறுமாறு கடிதம் வழங்கியுள்ளனர்.

கோவிட் தொற்றினால் நாம் பாதிக்கப்பட்டோம். பாதிக்கப்பட்ட நாம் இப்பொழுது தான் மீண்டு வருகின்றோம். ஆகவே இதனை ஆளுநர் கருத்திற்கொண்டு தனது தீர்மானத்தை எமக்காக கரிசனை கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...