இலங்கைசெய்திகள்

அரசின் மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்

Share
14 32
Share

அரசின் மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்

இலங்கையில் மின்சாரக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லையென தகவல்கள் வெளியாகி உள்ளன.

மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னரே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில்,

ஆணையத்தின் பரிந்துரைகள் நேற்று இலங்கை மின்சார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான தனது பரிந்துரைகள் குறித்து நிதியமைச்சகத்திடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 இன் கீழ் மின்சாரக் கட்டணங்கள் நிர்வகிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அதற்கமைய, மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான யோசனை இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பான இறுதி முடிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எடுக்கும். அந்த முறைமைக்கமைய, 2009 ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...