20 16
இலங்கைசெய்திகள்

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

Share

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் பண்பாட்டுப் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல், பண்டைய காலம் தொட்டு எமது மரபோடும் வரலாற்றோடும் கலந்த அற்புதமான பண்டிகையாகும்.

இயற்கையை வழிபடும், விலங்கள்மீது காருண்யத்தை வெளிப்படுத்தும், உழைப்பை மதிக்கும் தைப்பொங்கல் தமிழர்களின் சிறந்த பண்பாடாகவும் அறிவு வெளிப்பாடாகவும் உள்ளது.

தமிழர்களின் தொன்மையான வாழ்வில் இருந்து இன்றுவரை முக்கிய பொருளாதாரமாக இருக்கும் நெல் உற்பத்தியின், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இயக்கத்தையும் தைப்பொங்கல் உணர்த்துகிறது.

இதன் வழியாக தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பெரும் செய்தி தைப்பொங்கலில் வலியுறுத்தப்படுகின்றது.

இதேவேளை இன்றைய உலகம் பாரிய மாற்றங்களையும் விளைவுகளையும் கண்டுள்ளபோதும், கனடா போன்ற நாடுகள் தமிழ் மரபுத் திங்களை அங்கீகரித்துள்ளமை வாயிலாக தமிழர் பண்பாட்டின் வலிமையும் நாடு கடந்து அது நிலைபெற்றிருப்பதையும் நாம் உணர முடியும்.

இனப்படுகொலைப் போரினால் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள எமது மக்கள் நம்பிக்கையுடன் மீண்டெழவும் நீதி மற்றும் விடுதலையைப் பெறவும் இந்த நாள் புதிய நம்பிக்கையையும் விடியலையும் ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கையை வேண்டி வாழ்த்துகிறேன்…” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் போராட்டத்தை அழித்த ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும்...

images 2 3
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து...

Screenshot 2025 11 26 201240
இலங்கைசெய்திகள்

கரவெட்டி பிரதேச சபை ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி: முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார்!

கரவெட்டிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர்...

25 692286ceb2572
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனமழை காரணமாக தம்பலகாமத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில்...