19 15
இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைவரின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி

Share

எதிர்கட்சித் தலைவரின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி

தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் எதிர் கட்சி தலைவரால் வாழ்த்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் “தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும்.

மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. தைப்பொங்கலின் உண்மையான பொருளை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

விவசாய வாழ்க்கை முறையில், ஒருவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் வலுப்படுத்தி, பயிர்களை செழிப்பாக்க உதவிய சூரியன், மழை, இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், நன்றி செலுத்துதல் என்ற பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனை எதிர்கால சமுதாயத்தில் முறையாக உள்வாங்குவது நமது பொறுப்பாகும்.

ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம்.

ஆரம்பத்தில் விவசாய சமூகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விழா, இன்று இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களின் தேசிய விழாவாக மாறியுள்ளது.

பல்மத, பல்லின, பல்மொழி சமூகம் கொண்ட நமது தாய்நாட்டில், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றொரு தேசிய விழாவாக தைப்பொங்கல் விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...