2 26
இலங்கைசெய்திகள்

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

Share

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வேறொரு இடத்திலிருந்து நடத்தியதாகக் கூறினார்.

சகோதரனின் நிதிமோசடியை அம்பலப்படுத்தியவன் நானே

தனது சகோதரரின் நிதி மோசடியை முதலில் அம்பலப்படுத்தியவர் தான் என்றும், அது குறித்து தான் முறைப்பாடு அளித்ததிலிருந்து சகோதரனுடனான நட்பை துறந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாம் ஒரே வயிற்றில் இருந்து பிறந்தாலும், தனிநபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...