15 16
இலங்கைசெய்திகள்

பொலன்னறுவையில் சிக்கிய போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்! மூவர் கைது

Share

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை(Polonnaruwa) பிரதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று(10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர்.

மனம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48வயதுடையவரான குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் பிரகாரம், வேரஹெர மோட்டார் வாகன திணைக்கள அலுவலகம் அருகே சாரதி பயிற்சி பாடசாலை நடத்தும் ஒருவரையும், நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து மூன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Dailynews650 30
செய்திகள்உலகம்

காசாவிலிருந்து இஸ்ரேல் ஒருபோதும் முழுமையாக வெளியேறாது – பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் அதிரடி!

காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் முழுமையாக வெளியேறப்போவதில்லை என்றும், அங்கு நிரந்தர இராணுவ நிலைகள் அமைக்கப்படும்...

c9d5615a19635754440b10bcb516e833aee6712121167a7fe294725c3cf5d7ef 1024x682 2
செய்திகள்உலகம்

பொய் செய்திகளுக்கு 5 மடங்கு அபராதம்: தென்கொரியாவில் புதிய ஊடகச் சட்டம் நிறைவேற்றம்!

செய்தி நிறுவனங்கள், இணைய ஊடகங்கள் அல்லது யூடியூப் (YouTube) சேனல்கள் திட்டமிட்ட முறையில் பொய் தகவல்களைப்...

articles2F583so8SQNlVQZsKVUQic
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் தீவிர தேடுதல்!

கண்டி மாவட்ட செயலக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அங்கு நேற்று...

New Project 1 606896 552280
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 3 நாட்கள் தடுத்து வைக்க CID-யினருக்கு அனுமதி!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யக்...