13 15
இலங்கைசெய்திகள்

பாசிக்குடாவில் கடலலையால் ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

Share

மட்டக்களப்பில்(Batticaloa) பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(10.01.2025) இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று(10) காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல்மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...