1 19
இலங்கைசெய்திகள்

நீதிமன்றில் முன்னிலையான பிள்ளையான்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்றையதினம் (10.01.2025) களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி ஆணையாளர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...