19 10
இலங்கைசெய்திகள்

யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து: ஒருவர் பலி…சாரதி தலைமறைவு

Share

யாழ்ப்பாணம் (Jaffna) – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூரிலிருந்து – சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் பலாலியிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...