15 11
உலகம்செய்திகள்

திடீரென முடி உதிர்ந்து வழுக்கை தலையாவதால் கிராம மக்கள் பீதி

Share

திடீரென முடி உதிர்ந்து வழுக்கை தலையாவதால் கிராம மக்கள் பீதி

இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இவர்களுக்கு, உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல் ஏற்பட்டு 72 மணி நேரத்தில் வழுக்கையாகி தானாகவே முடி உதிர்ந்து விடுகிறது.

அவர்கள் தங்களது தலைமுடியை லேசாக கோதினாலும் மொத்த முடியும் வந்து விடுவதாக கூறுகின்றனர். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 50 பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் முடி உதிர்ந்துள்ளதால் அச்சம் நிலவுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியவில்லை.

இருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில், “கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. முடியை தொட்டாலே உதிர்கிறது” என்றார். முடி உதிர்தல் ஆரம்பித்து விட்டாலே ஒரு வாரத்தில் தலை வழுக்கை ஆவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...