கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம்: கனடா பதிலடி
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை சீண்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும் விமர்சித்திருந்தார் ட்ரம்ப்.
இந்நிலையில், கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
சமூக ஊடகமான எக்ஸில், கனடாவையும் அமெரிக்காவையும் இணைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ’ஓ கனடா!’ என அந்த படத்திற்கு பெயரும் இட்டுள்ளார் ட்ரம்ப்.
உடனடியாக ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியும் எக்ஸில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
’யாராவது குழப்பமடைந்திருந்தால்’ என தலைப்பிட்டு, எது அமெரிக்கா, எது அமெரிக்கா அல்ல என வெவ்வேறு வண்ணங்களில் காட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது லிபரல் கட்சி.