14 8
உலகம்செய்திகள்

பாலத்தின் மேலிருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த பரிதாபம்

Share

பாலத்தின் மேலிருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த பரிதாபம்

பாலத்தின் மேல் இருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலுங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட 30 நாய்களில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பு தொண்டர்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜனவரி 4 ஆம் திகதி நடந்துள்ளது.

இந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாய்களை வேறு இடத்தில் வைத்து கொன்று விட்டு பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் விலங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து, காயமடைந்த 11 நாய்கள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு நாகோலில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Share
தொடர்புடையது
5 21
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே அதிகரித்துள்ள மூன்று நோய்களின் பாதிப்பு

குழந்தைகளிடையே தற்போது மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு...

4 20
இலங்கைசெய்திகள்

நல்லூரில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது...

3 21
உலகம்செய்திகள்

ட்ரம்ப் – புடின் சந்திப்பே இறுதி முடிவு.. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு

துருக்கியில் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை என அமெரிக்கா...

2 29
உலகம்செய்திகள்

உற்றுநோக்கும் சர்வதேசம்! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி...