7 16
சினிமாபொழுதுபோக்கு

ஒரு பெண் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை.. இதுதான் காரணம், ஜெயம் ரவி ஓபன்

Share

ஒரு பெண் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை.. இதுதான் காரணம், ஜெயம் ரவி ஓபன்

ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. முதல் படம் கொடுத்த வெற்றியின் காரணமாக தனது பெயரை ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார்.

அப்படத்தின் வெற்றிக்கு பின், அடுத்து எம்.குமரன் S/o மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், அடங்க மறு, மிருதன், கோமாளி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் பிரதர் படம் வெளியானது ஆனால் சரியாக படம் ஓடவில்லை. தற்போது, ஜெயம் ரவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நித்யா மேனனுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 14 பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர்கள் படத்தின் போஸ்டரில், ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, ” நன் முதன் முதலாக ஒரு பெண் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இதுவரை எனக்கு இருந்த பார்வையை அவர் மாற்றிவிட்டார்.

எப்போதும் ஒரு ஆணின் பார்வையில் இருந்தே, அனைத்தையும் அணுகிப் பழகிய எனக்கு பெண்ணின் பார்வை குறித்து கிருத்திகா உதயநிதி சொல்லிக் கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
34 4
சினிமா

பல வருடங்களுக்கு பின் எனக்கு அது கிடைத்துள்ளது.. நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக...

37 2
சினிமா

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ்,...

35 5
சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன். அதன்பின்...

36 2
சினிமா

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின்...