25 677bbd2ab9b9a
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

Share

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு

பேருந்துகள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்களை அகற்றுவதற்கு இரண்டு வார கால அவகாசம் காவல்துறை போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தமது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றுமாறு காவல்துறை போக்குவரத்து பிரிவினர் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்த முக்கிய அறிவிப்பு | Remove Unnecessary Parts From Vehicles Before 17Th

இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சத்தம் எழுப்பும் ஹார்ன்கள், இரும்பு கம்பிகள், தேவையற்ற மின்விளக்குகள், அலங்காரங்கள் என அனைத்து தேவையற்ற கூறுகளும் அகற்றப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த தேவையற்ற உதிரி பாகங்கள் பொதுவாக தனியார் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் காணப்படுவதாக தெரிவித்த பிரதி காவல்துறை மா அதிபர், இந்த உதிரி பாகங்களினால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 17 ஆம் திகதி பிறகு, நிறுவப்பட்ட இந்த உதிரி பாகங்களை சட்டத்தின் வரிசையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...