6 3
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் குடும்பத்தை மோதித் தள்ளிய டிப்பர் : மகளை தொடர்ந்து தாயும் பலி

Share

கிளிநொச்சியில் குடும்பத்தை மோதித் தள்ளிய டிப்பர் : மகளை தொடர்ந்து தாயும் பலி

கிளிநொச்சி (Kilinochchi) நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர்  – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் நேற்று (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 7 வயதான மற்றுமொரு சிறுமியும் அவரது தாய் மற்றும் தந்தையே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த  தாயார் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம்(02) உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...