rajini 1
சினிமாபொழுதுபோக்கு

இந்த நோயால் நடிகர் ரஜினிகாந்த் பாதிப்பா..?

Share

உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு(இன்பார்க்ட்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு ஏதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள இரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#CinemaNews,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s janaki
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு...

visnu vishal
சினிமா

கட்டா குஸ்தி 2 வெற்றி விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் வழங்கிய பரிசு.

முதல் பாகத்தின் வெற்றியினை தொடர்ந்து மிக சிறப்பாக வெளியாகி உள்ளது கட்டா குஸ்தி 2 ....

Jana Nayagan vijay d
சினிமா

திரைக்கு வருகிறது ஜனநாயகன் – எப்போது தெரியுமா?

விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படமான ஜனநாயகன் எப்போது திரை அரங்குகளை வரும் என ரசிகர்கள்...

watch
சினிமா

திருமண கொண்டாடட்டத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஜான்வி கபூரின் கைக்கடிகாரம்

அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டம் தற்போது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்...