12 21
இலங்கைசெய்திகள்

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

Share

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratna) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

புதிய அரசமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும். நாட்டில் இதுவரை இயற்றப்பட்ட அரசமைப்புகளின்போது மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லை.

எம்மால் கொண்டுவரப்படும் அரசமைப்பு மக்கள் அனுமதி கிடைத்ததாக இருக்க வேண்டும். அதற்குரிய பணிகளுக்காகவே மூன்று வருடங்கள் என கால எல்லை குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கடந்த கால யோசனைகளும் உள்வாங்கப்பட்டு எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதனைச் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். சிலவேளை மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட அது நடக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...