29 7
இலங்கைசெய்திகள்

நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

Share

நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி அதே திசையில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

குறித்த நோயாளர் காவு வண்டி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து, களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்ற வேளையிலேயே விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி, விசேட தாதிய பரிபாலகி, மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று போர் இதில் காயமடைந்துள்ளனர்.

எனினும் நோயாளர் காவு வண்டியின் முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இது குறித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...