21 10
இலங்கைசெய்திகள்

2025 இல் வடக்கு பாரிய மாற்றம் காணும் : எம்.பி வெளியிட்ட நம்பிக்கை

Share

2025 இல் வடக்கு பாரிய மாற்றம் காணும் : எம்.பி வெளியிட்ட நம்பிக்கை

உண்மையான வடக்கின் வசந்தம் 2025 ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekaran) தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றையதினம் (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

2025 இல் வடக்கு பாரிய மாற்றம் காணும் : எம்.பி வெளியிட்ட நம்பிக்கை | Chandra Shekaran Explanation On Northern Politics

அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ,அது தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன் மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது.

அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும் வடமாகாண ஆளூநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன் வைக்கப்பட்டு , நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்காகும்.

விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம்.

கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...