6 16
இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் தேசிய பட்டியல் விவகாரம் – பெயர் விபரம் தொடர்பில் தகவல்

Share

சஜித் அணியின் தேசிய பட்டியல் விவகாரம் – பெயர் விபரம் தொடர்பில் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும் அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith Perera) தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் நான்கு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.

தேசியப் பட்டியல் வாய்ப்பைத் தோல்வி அடைந்த உறுப்பினர்களும், பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கோருவதால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கே, “பிரச்சினை தீர்ந்துவிட்டது, பெயர் விபரத்தை மட்டுமே அறிவிக்க வேண்டியுள்ளது.

அதனைக் கட்சித் தலைவர் அறிவிப்பார் என்றும் அஜித் பிபெரேரா குறிப்பிட்டுள்ளார்

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குச் சாதகமான பெறுபேறு கிட்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...