24 9
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: அநுர அரசாங்கம் எடுக்க காத்திருக்கும் முடிவு

Share

சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: அநுர அரசாங்கம் எடுக்க காத்திருக்கும் முடிவு

சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

“சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன்” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகள் பரவியிருந்தன.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தமக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறினால் அதனை நிரூபித்து காட்டுமாறு சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தார்.

மேலும், சமூக ஊடகங்களில் வலம் வரும் குறித்த தகவல்கள் உண்மையாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...