17 10
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான அதிகபட்ச விலை – வெளியான வர்த்தமானி

Share

அரிசிக்கான அதிகபட்ச விலை – வெளியான வர்த்தமானி

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு கிரீசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...