11 7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் டொலர் வருமானம்

Share

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் டொலர் வருமானம்

இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறை மூலம் குறுகிய காலத்தில் 8,500 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”க்ளீன் சிறிலங்கா (Clean Sri lanka) என்ற பெயரில் இலங்கையை மாற்றியமைக்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றும் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பணிகள் தற்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ளன.

குறுகிய காலத்தில் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து, அதனூடாக 8,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எனவே, 2025 ஆம் ஆண்டு வணிக ரீதியில் சுற்றுலாத்துறைக்கு ஒரு முக்கிய ஆண்டாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் துரிதப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், சுற்றுலா வலயங்களின் சுகாதார தேவை தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்குத் தனியார் துறையின் பங்களிப்பையும் எதிர்பார்த்துள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...