6 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

Share

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை ஒரு கட்சி என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை உள்ளது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) கேள்வியெழுப்பியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்தது தவறாக நடந்துள்ளது. ஒரு நாடாக நாம் இன்று ஜனநாயகம் தொடர்பில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில்(sri lanka) இருந்து உகாண்டாவுக்கு(uganda) ராஜபக்ச குடும்பம்(rajapaksa family) பணம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி, மக்களின் மனதை சிதைத்து, மக்கள் உள்ளங்களில் வெறுப்பை விதைத்தனர்.

ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறுப்பை விதைத்து, 75 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன(jvp) இப்போது சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குகிறது.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை கட்சி ரீதியாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சமூக ஊடக ஆர்வலர்களின் கைது முற்றிலும் தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்காக இப்படிச் செய்ததற்காக  இலங்கை காவல்துறை வெட்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் உரிமை என்ன என்பதை அவர்கள் மனசாட்சியுடன் கேட்க வேண்டும். மேலும் இது மிகவும் சோகமான மற்றும் தவறான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...