9 1
இலங்கைசெய்திகள்

விரைவில் கவிழும் அநுர அரசாங்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

விரைவில் கவிழும் அநுர அரசாங்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அமைச்சர்களின் அனுபவமின்மையால் தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவின் அரசாங்கத்தை விடவும் விரைவில் கவிழும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் எரிபொருள் விலை சூத்திரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதாகவும் எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றுவதற்கு கூட அரசாங்கத்திற்கு போதிய அறிவு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், “நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3500 மெட்ரிக் டன் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 300 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைப்பதற்கு பதிலாக மண்ணெண்ணெய் விலையை 20 ரூபாய் குறைத்திருக்கலாம், இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த நிவாரணம் பெறுகின்றனர்.

பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. முன்னாள் அமைச்சர்களின் சட்டைப்பைக்குள் எரிபொருள் விற்பனையில் இருந்து பெரும் கமிஷன்கள் சென்றதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றஞ்சாட்டியது.

ஆனால் இப்போது அந்த கமிஷன் தொகையை கூட தேசிய மக்கள் சக்தி அரசால் குறைக்க முடியவில்லை. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த பொய்யான வாக்குறுதிகள் தற்போது ஒவ்வொன்றாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 22
உலகம்செய்திகள்

ஹொங்கொங் உயரமான வீடமைப்பு வளாகத்தில் பயங்கர தீ: 13 பேர் பலி, 28 பேர் காயம்!

ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ...

Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வானது, இன்று...

Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று...

WhatsApp Image 2025 11 27 at 23.47.04 f47798a4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின...