சினிமா
ஒரு டிக்கெட் 3000 ரூபாயா? புஷ்பா 2 டிக்கெட் விலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோரின் நடிப்பு, ஸ்ரீலீலாவின் கவர்ச்சி பாடல் என படம் மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பை வைத்து இருக்கின்றனர்.
படம் pan இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் முன்பதிவு தொடங்கி தற்போது பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து வருகிறது.
ஒரு டிக்கெட் 3000 ரூபாயா? புஷ்பா 2 டிக்கெட் விலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள் | Pushpa 2 Ticket Price Shocks Fans
புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக இணையத்தில் தற்போது விமர்சனம் எழுந்து இருக்கிறது.
மும்பையில் 3000 ரூபாய் என அதிகாரபூர்வமாக டிக்கெட் விற்கப்பட்டு இருப்பது பற்றி நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
டெல்லியில் 1800 ருபாய வரை புஷ்பா 2 டிக்கெட் விற்கப்படுகிறதாம். அதை பலரும் ட்விட்டரில் புகாராக கூறி இருக்கின்றனர்.
இப்படி அதிக விலைக்கு டிக்கெட் விற்பது பற்றி நெட்டிகன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தெலுங்கு மாநிலங்களில் டிக்கெட் விலையை அதிகரித்து விற்க அரசே அனுபதி அளித்து இருக்கிறதாம்.