16 25
இலங்கைசெய்திகள்

ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..!

Share

ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்றையதினம் (26) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திகதிகளை அறிவிக்கவும் முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கட்சித் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடத்தப்பட்டு வேட்புமனுக்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்க முன்னரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...