இலங்கை
உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை(25) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..
பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..
ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு
அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 390 பேரும் 79 ஆயிரத்து 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின்போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
மேலதிக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த முடியும் எனவும் பரீட்சை மண்டப உதவி பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.