333
ஏனையவை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

Share

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் (Ravi Karunanayake) பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) தெரியாது என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும் எனவும் இதுதொடர்பில் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் நேற்று (18) காலியில் (Galle) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரள (Thalatha Atukorale) அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம்.

இதுதொடர்பில் உறுதியான தீரமானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் 3 3,4 உறுப்புரைகள், 97ஆம் உறுப்புரை, 137 மற்றும் 138ஆம் உறுப்புரைகளை மீறும் நடவடிக்கையாகும்.

எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம். எனினும் ரவி கருணாநாயக்கவின் இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமக்கு எதுவும் தெரியாது.

தலதா அத்துகோரளவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடி வந்தது. அது தொடர்பில் இன்று கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு இருந்த நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது.

என்றாலும் இந்த சர்ச்சை தொடர்பில் இன்று காலை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் அனைத்து கட்சி பிரதானிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...