9 29
ஏனையவை

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

Share

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதன் முறையாக வைத்தியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுநர்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியில் இருந்து 15 வைத்தியர்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், வைத்தியர். நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியர். நிஹால் அபேசிங்க, வைத்தியர். ரிஸ்வி சாலிஹ், வைத்தியர்.பிரசன்ன குணசேன, வைத்தியர். நாமல் சுதர்ஷன, வைத்தியர். நிஷாந்த சமரவீர, வைத்தியர்.தம்மிகா படபெந்தி, வைத்தியர்.சுசில் ரணசிங்க, வைத்தியர்.ஹன்சக விஜேமுனி, வைத்தியர்.எஸ். திலகநாதன், வைத்தியர்.மதுர செனவிரத்ன, வைத்தியர்.ஜனக சேனாரத்ன, வைத்தியர்.சண்டருவன் மதரசிங்க, வைத்தியர்.ஜகத் விக்கிரமரத்ன, வைத்தியர்.ஜகத் குணவர்தன.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட அதிபர்கள் 21 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சாந்த பத்மகுமார, மஞ்சுள சுரவீர ஆராச்சி, பத்மசிறி பண்டார, ரத்னசிறி சுனில், சுஜீவ திசாநாயக்க, சந்தன தென்னகோன், சஞ்சீவ ரணசிங்க, நந்த பண்டார, மஞ்சுளா ரத்நாயக்க, ருவன் விஜேவீர, சதுரி கங்கானி, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ரொஷான் அக்மீமன, முனீர் முலாஃபர், ஹேமாலி வீரசேகர, உபுல் கித்சிறி, டி.கே ஜெயசுந்தர, எஸ்.பிரதீப், அரவிந்த செனரத், ருவன் மாபலகம.

மேலும், தேசிய மக்கள் சக்தியில் இருந்து 16 வழக்கறிஞர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சுனில் வதகல, ஹர்ஷன நாணயக்கார, சுசந்த தொடவத்த, நிலாந்தி கோட்டஹச்சி, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஹசர கம்மன லியனகே, உபுல் அபேவிக்ரம, அனுஷ்கா தர்ஷனி, கீதா ஹேரத், சாகரிகா அத்தாவுடா, பாக்ய ஸ்ரீ ஹேரத், துஷாரி ஜயசிங்க, பிரியந்த விஜேரத்ன, சரத் ​​குமார, நிலுஷா கமகே, ஹிருனி விஜேசிங்க.

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...