19 5
இலங்கைசெய்திகள்

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

Share

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

தனியார் துறையில் சேவையில் ஈடுபடும் வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கட்டாயம் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் பெறுபெறுகள் வெளியானவுடன் பொது இடங்களில் ஒன்று கூடி, பட்டாசு கொளுத்துவது சட்டத்தின் பிரகாரம் குற்றச்செயலாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமையில் ஈடுபடாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...

images 1 8
செய்திகள்இலங்கை

தங்காலையில் அதிர்ச்சி: துப்பாக்கிச் சூட்டில் 68, 59 வயதுடைய தம்பதியினர் பரிதாப பலி!

தங்காலை – உனாக்குருவ பகுதியில் இன்று (நவம்பர் 18) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

images 20
இலங்கைஅரசியல்செய்திகள்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது – அமைச்சர் ஆனேந்த விஜேபால பாராளுமன்றில் தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட...