5 10
இலங்கைசெய்திகள்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

Share

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “அநுரகுமார திஸாநாயக்க எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கும், அநுரகுமார திஸாநாயக்க என்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இதனால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர் என்ன கூறினார். 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகக் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதாகக் கூறினார்.

மின்கட்டணம், நீர்க்கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறினார். கடவுச்சீட்டு வரிசையை இல்லாதொழிப்பதாகக் கூறினார்.

இவ்வாறு கூறிய ஒரு வாக்குறுதியையேனும் ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளாரா?

இதிலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாக்கு எடுக்க ஒரு கதையும் வாக்கு எடுத்து அதிகாரத்திற்கு வந்தவுடன் இன்னொரு செயற்பாட்டையும்தான் ஜனாதிபதி செய்து வருகிறார்.

ஐ.எம்.எப். இற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று ஐ.எம்.எப். இன் கைப்பாவையாக மாறியுள்ளார்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...