24 6729f86c5193c 7
சினிமாசெய்திகள்

ரஜினி, கமல் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.. லோகேஷ் கனகராஜின் அதிரடி பதில்

Share

ரஜினி, கமல் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.. லோகேஷ் கனகராஜின் அதிரடி பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லியோ படத்தை தொடர்ந்து இவர் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “ரஜினி சார் இயக்குனர்களின் நடிகர். அவர் படத்தில் நடிக்கும் சக நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனித்து கொண்டு பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்து கொண்டே இருப்பவர்.

கமல் சார் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒருவர். அவர் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று அவரே கூறுவார். ஆனால், இருவருமே கேமராவுக்கு முன்பு நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...

image 1200x800 31 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – அதிர்ச்சித் தகவல்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடி விளக்கம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க...