24 6725bd2861654
சினிமாசெய்திகள்

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

Share

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது, அடுத்த தளபதி நீங்கள் தானா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலேசியாவில் விஜய்யின் கோட் படத்தை மிஞ்சியுள்ளது.

ஆம், மலேசியாவில் அமரன் வெளிவந்து இரண்டாம் நாளில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் வந்துள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1.35 லட்சம் மக்கள் அமரன் படத்தை பார்க்க இரண்டாம் நாள் வந்துள்ளார்களாம்.

இதற்கு முன் இந்த சாதனையை லியோ படம் செய்திருந்த நிலையில், தற்போது லியோ, ஜெயிலர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும் இது மலேசியாவில் இரண்டாம் நாளுக்கான விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...