13 27
உலகம்செய்திகள்

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Share

இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் விளைவாக வீதியிர் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த வெள்ளத்தில் ஒரு தொடருந்து தடம் புரண்டதுடன், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் ஸ்பெயின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாது என ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள சிச்வா பகுதியில் செவ்வாய்கிழமை எட்டு மணித்தியாலங்களில் 491 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இது ஸ்பெயினில் ஒரு வருடத்தில் பெய்யும் மழைக்கு சமனானது என அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...