இலங்கை
இலங்கையில் அத்துமீறி தங்கும் சுற்றுலாப்பயணிகள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் அத்துமீறி தங்கும் சுற்றுலாப்பயணிகள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை உடனடியாக நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த தீர்மானத்தை செயற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் தென்பகுதி கரையோரங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் சிலரே இவ்வாறு விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதி கடற்கரைகளுக்கான சுற்றுலாப் பருவம் நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் நடைபெறுவதால் இந்த காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இலங்கைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் 30 நாள் சுற்றுலா விசாவையே பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.