உலகம்செய்திகள்

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல தசாப்தங்களாக நடைபெற்ற காலநிலை பேச்சுவார்த்தைகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முன்னேற்றமும் இருந்த போதிலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 3.1°C என்ற பேரழிவுகரமான வெப்பநிலை உயர்வுக்கு நாம் நெருங்கி வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு இடைவெளி அறிக்கையில், பசுமை வாயு வெளியீடுகள் 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டியதையும் மற்றும் வளர்ச்சியின் விகிதம் பெருந்தொற்றுக்கு முந்திய காலத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதும் மற்றும் நாடுகள் தீவிரமான காலநிலை நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தாததுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அத்தோடு, தற்போதைய போக்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C இலக்கை நிறைவேற்றுவதற்கு உலகை மிகுந்த போராட்டத்திற்கு இட்டுச் செல்வதாக சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...