WhatsApp Image 2021 08 05 at 22.57.44
செய்திகள்விளையாட்டு

முதல் பந்திலேயே கோலி காலி – அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

Share

முதல் பந்திலேயே கோலி காலி – அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்றுமுன்தினம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் அரைச்சதம் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4, ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாளான நேற்று இந்திய அணியில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் மிக நேர்த்தியான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டை பறிகொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக துடுப்பாட்டம் ஆடினர். அதனால், இங்கிலாந்து அணியால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தவே முடியவில்லை. இந்த ஜோடி 30 ஓவர்களுக்கு மேல் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது. இறுதியில் ராபின்சன் வீசிய 38ஆவது ஓவரில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய புஜாரா வெறும் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். விராட் கோலியை தொடர்ந்து ரகானேயும் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 15 ரன்களுக்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். அவருடன் ரிஷப் பண்ட் களத்தில் உள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...