3 31
சினிமாசெய்திகள்

ரூ. 250 கோடி சொத்து இருக்கு, 3வது திருமணத்திற்கு தயாரான தமிழ் பட நடிகர்… யாரு?

Share

ரூ. 250 கோடி சொத்து இருக்கு, 3வது திருமணத்திற்கு தயாரான தமிழ் பட நடிகர்… யாரு?

பிரபலங்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் என்ன செய்தாலும் மக்களிடம் பிரபலம் ஆகிவிடும்.

மக்கள் நம்மை அதிகம் கவனிக்கிறார்கள், பாலோ செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு முன்னணி நடிகர்கள் அனைவருமே தங்களது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள், அதில் தவறாக எதையும் கூறிவிட கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

இப்போது ஒரு நடிகர் குறித்து அவரது சமீபத்திய பேட்டி பற்றியும் தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படுகிறது.

தமிழ் மற்றும் மலையாள சினிமா படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பாலா.

தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாலா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின் டாக்டர் எலிசபெத் என்பவரை ரகசியமாக பாலா திருமணம் செய்திருந்தார், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பாலா மீது அவரது முதல் மனைவி, என்னையும் எனது மகளையும் வழிமறித்து பாலா தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்க காவல்துறையினரால் பாலா கைது செய்யப்பட்டார்.

தற்போது ஜாமினில் வெளியாகியுள்ள பாலா பேட்டியில், தனது குடும்ப சொத்தில் இருந்து எனது பங்காக ரூ. 250 கோடி சொத்து வந்துள்ளது, அதன் அறிவிப்பு வெளியானதில் இருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது.

இதனால் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். 3வது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...