3 28
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் இணையும் முன்னாள் ஜனாதிபதிகள்

Share

அநுர அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் இணையும் முன்னாள் ஜனாதிபதிகள்

புதிய அரசாங்கத்தினால் தமது சிறப்புரிமைகள் குறைக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு (16) ஆம் திகதி மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  முன்னாள் ஜனாதிபதிகள் தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்புரிமைகள் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சலுகைகள் குறைக்கப்படுமாயின், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டமூலத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...