wedding
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த கதி!

Share

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாகல், குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு  பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, குளியாப்பிட்டிய பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள் செயற்படுவதால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, குளியாப்பிட்டிய பொதுசுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...