18 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Share

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி விசேட அமைச்சரவை கூடி கடவுச்சீட்டு தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

புதிய வழங்குனர் ஒருவரிடமிருந்து 750,000 புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலுக்கு கடந்த அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

அதே நிறுவனத்திடம் இருந்து சாதாரண கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு முன்னாள் அமைச்சரவை தீர்மானித்தது, ஆனால் அதற்கு முன்னர் வழங்கிய வழங்குனர்கள், அவர்களின் ஒப்பந்தத்தின்படி கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு உரிமையுடையவர் என்பதால் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 750,000 கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முந்தைய வழங்குனர் ஒரு குறிப்பிட்ட விலையில் கடவுச்சீட்டுகளை அச்சிட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது முந்தைய வழங்குனரை தேவையான கடவுச்சீட்டுகளை தொடர்ச்சியாக வழங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...