3 15
இலங்கைசெய்திகள்

அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

Share

அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

அம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் 88 வருடங்களுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலில் தனது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ), முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச (Samal Rajapaksa) மற்றும் பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருந்தது.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ச (Sasindra Rajapaksa) மொனராகலை (Monaragala ) மாவட்டத்திலும் மற்றும் நிபுண ரணவக்க (Nipuna Ranawaka) மாத்தறை (Matara) மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முன்னாள் மின்சார இராஜாங்க அமைச்சர் டி.வி. திரு.சானக்க (T.V.Sanaka) வேட்புமனுக்களை கையளித்துள்ளார்.

அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர் | Rajapaksa Family Lost Political Status Ambandottai

இருப்பினும், 1936 ஆம் ஆண்டில் டி.எம். ராஜபக்ச (T.M.Rajapaksa), அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளராகத் தேர்தல் அரசியலைத் தொடங்கினார்.

இதையடுத்து, டி.ஏ.ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச, ஜார்ஜ் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச மற்றும் ஷியாம்லால் ராஜபக்ச என அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் வேட்பாளர்களாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தோன்றினர்.

இந்தநிலையில், முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இம்முறை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டாலும் இவர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...