3 14
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

Share

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது 4.4 சதவீத பொருளாதார வேகத்தை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Sri Lanka Development Update and Opening up to the Future என்ற அறிக்கையின் அடிப்படையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக தீர்வு காண முடிந்தால், வருடத்திற்கு கிட்டத்தட்ட 142,500 புதிய வேலை வாய்ப்புகளையும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தையும் ஈட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி வருடத்திற்கு இரண்டு தடவை இலங்கையின் அபிவிருத்தி பற்றி அறிக்கை வெளியிடுவது வழக்கம். இம்முறை எதிர்காலத்திற்கான வாய்ப்புக்களை திறத்தல் என்ற தொனிப்பொருளில் வெளியான அறிக்கையில் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வு கூறல்கள் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...

21 4
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் முற்பகை காரணமாக இளைஞன் வெட்டிப் படுகொலை! – நீதவான் உத்தரவு

கிளிநொச்சி, அக்கராயன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில், இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை...