15 8
இலங்கைசெய்திகள்

இளம் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு – தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

Share

இளம் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு – தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

உயிரை மாய்க்க முயன்ற இள வயது தாய் மற்றும் பிள்ளையை ரயில் சாரதி காப்பாற்றியுள்ளார்.

களனிவெலி ரயில் வீதியின் அவிசாவளை ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப நிலையங்களுக்கு இடையில் இளம் தாயும் அவரது மூன்று வயது மகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ரயில் சாரதியின் அவதானம் காரணமாக நேற்று காலை குறித்த இருவரையும் காப்பாற்ற முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாயும் மகளும் ரயிலில் மோதுண்ட போதிலும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.

இருவரும் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்தது. குறித்த ரயில் ஹிங்குரல உப நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட வேண்டும் என்பதனால் ரயில் வேகக் கட்டுப்பாட்டில் இயங்கியுள்ளது.

இதன் காரணமாக இருவரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4119716
செய்திகள்உலகம்

மதுரோவை எங்களிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்காவிடம் ஆர்ஜன்ரீனா உத்தியோகபூர்வக் கோரிக்கை!

மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்காவால் அண்மையில் கைது செய்யப்பட்ட வெனிசுலா...

download
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்களால் அதிரும் பிரிட்டன்: மன்னிப்பு கோரினார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத்...

Makadure Madush 1200px 24 11 07
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மஹரகமவில் பரபரப்பு: காவல்துறை கான்ஸ்டபிளைத் தாக்கிய மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் மகன் கைது!

கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் அவரது 21...

capture 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆசிரியர்கள் பாரிய போராட்டம்!

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிக்கும் சலுகை...