17283543000
சினிமா

மேனஸ் இல்லையா? விஜயாவை வெளுத்து வாங்கிய மருமகள்.. புதிய சிக்கலில் மாட்டிய முத்து

Share

மேனஸ் இல்லையா? விஜயாவை வெளுத்து வாங்கிய மருமகள்.. புதிய சிக்கலில் மாட்டிய முத்து

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதிக்கு பார்சல் ஒன்று வருகின்றது. அதனை மீனா சைன் பண்ணி எடுக்கப் போக விஜயா வந்து அவருக்கு பேசிவிட்டு பார்சலை எடுத்து செல்கின்றார். ஆனால் மீனாவை சைன் வைக்குமாறு சொல்லுகின்றார். அந்த பார்சலை விஜயா விரித்து பார்க்கும்போது மீனா ஸ்ருதிக்கு வந்த பார்சலை விரித்து பார்க்க வேண்டாம் என்று சொல்கின்றார். ஆனாலும் அதை கேட்காமல் அதை பிரித்து பார்க்கின்றார் விஜயா.

அந்த நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் அங்கு வர விஜயா போட்டிருந்த ஹெட்போனை பார்த்துவிட்டு வாங்கினீங்களா என்று ஸ்ருதி கேட்க, இல்லை உனக்கு வந்த பார்சல் தான் என்று விஜயா சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்ட ஸ்ருதி எனக்கு வந்த பார்சலை எதுக்கு நீங்க தொரந்தீங்க மேனஸ் இல்லையா அன்று விஜயாவுக்கு பேசுகின்றார்.

மறுபக்கம் மீனாவும் முத்துவும் சத்யாவுக்காக பேசுவதற்காக பிரின்சிபிலை சந்திக்க செல்கின்றார்கள். ஆனாலும் அவரை சந்திக்க முடியாது, சனிக்கிழமை போய் சந்திக்குமாறு சொல்லுகின்றார்.

ஆனாலும் முத்து அவரை டீ குடிக்க கூட்டிப் போய் பிரின்சிபில் எப்படி கரெக்ட் பண்ணுவது என்று கேட்க, அவர் நல்ல மனுஷன் தான். ஆனால் அவருடைய பொண்ணு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவன் சரியான குடிகாரன் எந்த நேரமும் போதையில் தான் இருப்பான். ஒருநாள் அவருடைய மகளை குடித்துவிட்டு அடித்து விட்டார் இதனால் அவருடைய மகள் இப்போது வீட்டில் தான் இருக்கின்றார். இந்த காரணத்தினால் தான் அவர் மனமுடைந்து போயிருக்கின்றார் என்று சொல்லுகின்றார்.

இதன் காரணத்தினால் நாம ஒரு பிரச்சனையோட வந்தா அவருக்கு ஒரு பிரச்சினை இருக்குதே என்று முத்து யோசிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட். எனினும் சத்யாவின் பிரச்சனையும் தற்போது பிரின்சிபல் பிரச்சனையையும் சேர்த்து தீர்த்து வைப்பாரா முத்து என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...